சென்ற 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கும் விதமாகவும், பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என தெரிவித்து சசிகலா தரப்பால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் முடிவடைந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்று அந்த வழக்கை மறுபடியும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அந்த சமயத்தில் பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும் போது ஒரு சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.
அதாவது சசிகலா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு அதனை உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் எடுத்த முடிவை ஏற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று சசிகலா தவறான தகவலை தெரிவித்து வருகிறார் என கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இனை ஒருங்கினைப்பாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.. இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தவும், அனுமதி வழங்கி இருக்கிறது அதிமுகவில் இல்லை என்ற சமயத்தில் கட்சியின் உறுப்பினர்கள் விவரம், சொத்து, வைப்புநிதி, தலைமை அலுவலகத்தின் சாவி, உள்ளிட்டவை போன்றவற்றை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறுவது எந்த விதத்திலும் ஏற்புடையது இல்லை என தெரிவித்திருக்கிறார், அதோடு அதிமுகவில் உரிமை கோரவும், சசிகலாவிற்கு எந்தவிதமான அடிப்படை உரிமையும், இல்லை என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்து இருக்கிறது.
இதனையடுத்து சசிகலா தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு நீதிபதி தள்ளி வைத்து இருக்கிறார்.