சட்டத்தை மதிக்காத சசிகலா! ஜெயக்குமார் காட்டம்!

0
136

அதிமுக எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதிமுகவின் பொன்விழா ஆண்டு தற்சமயம் கொண்டாடப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அந்த கட்சியை சார்ந்த முக்கிய நபர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டதுதான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கத்தில் திமுகவில் இருந்த எம்ஜிஆர் அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அந்த கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார்.இந்த சூழ்நிலையில், தற்சமயம் அந்த கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 50 ஆவது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழி ஆன சசிகலா அதிமுகவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார், அந்த விதத்தில் சமீபத்தில் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த ராமாவரம் இல்லத்தில் அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்து அந்த கல்வெட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா என்று பெயரை எழுதி வைத்திருக்கிறார்கள்.

இது அதிமுகவினர் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது,, இந்த நிலையில், சசிகலா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். நேற்று இரவு ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்கள். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உரையாற்றி இருக்கிறார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, அதிமுகவில் வீணான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்க வேண்டும், என்ற உள்நோக்கத்துடன் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தெரிவித்து கல்வெட்டு வைப்பதும், அதிமுக கொடியை தன்னுடைய காரில் பயன்படுத்துவதும், சட்டத்தை மதிக்காத செயல் என்று தெரிவித்திருக்கிறார்.

டெல்லி உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை இதுகுறித்து தீவிர விசாரணை செய்து அதிமுக என்பது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் வசம்தான் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கி விட்ட நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா உச்ச நீதிமன்றத்திற்கு சென்று உச்சநீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதிப்படுத்தி விட்ட சூழ்நிலையில், அதையும் நீதி மறு சீராய்வு மனு தாக்கல் செய்தார் சசிகலா அதையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என கூறியிருக்கிறார்.

இப்படி அனைத்தும் தெளிவாக இருக்கின்ற சூழ்நிலையில், சசிகலா குழப்பம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றார் இது சட்டத்திற்கு உட்பட்ட விஷயம் கிடையாது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி நீதிமன்ற தீர்ப்புகளும் எதிரான செயல் சட்டத்தை மதிக்காமல் வீணான குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு சசிகலா இவ்வாறு செய்து வரும் செயல் சட்டப்படி ஏற்கத்தக்கது கிடையாது. இதன் காரணமாக, அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இன்றைய தினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் எங்களுடைய புகாருக்கு ரசீது கூட இதுவரையில் காவல்துறையினர் சார்பாக கொடுக்கப்படவில்லை, மேலிடத்தில் கேட்டுவிட்டு தருவதாக தெரிவிக்கிறார்கள் அரைமணி நேரமாக கேட்டும் இதே பதிலையே தெரிவிக்கிறார்கள். இதிலிருந்து சசிகலாவிற்கு திமுக அரசு மறைமுக ஆதரவாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது என கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Previous article‌ உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!
Next articleகணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்!