ADMK: செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியல் பார்த்து வந்தவர், சொல்லப்போனால் எடப்பாடிக்கு முன்னதாக முதலமைச்சர் பதவிக்கு இவரை தான் பரிந்துரை செய்திருந்தனர். அதேபோல இவரும் எடப்பாடியும் ஒரே ஜாதி வகுப்பை சேர்ந்தவர்கள். அப்படி இருக்கையில் தற்பொழுது இருவருக்குமிடையே பனி போரானது ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக எடப்பாடிக்கு விவசாய சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழா தான் என கூறுகின்றனர். குறிப்பாக செங்கோட்டையனே கூறியதாவது, மறைந்த முதல்வர்களின் புகைப்படங்கள் ஏதும் இடம்பெறாத தான் முக்கிய காரணம் என தெரிவித்திருந்தார்.
ஆனால் இதன் பின்னணியில் இது ஒரு சதவீதம் கூட உண்மையல்ல என கூறுகின்றனர். இவரின் பெயர் முக்கிய இடத்தில் இடம்பெறாது தான் இவருக்கான கோபம் என அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர். இப்படி இருக்கையில் இரட்டை இலை வழக்கு சம்பந்தமாகவும் பன்னீர்செல்வத்திற்கு தீர்ப்பு கிடைத்துள்ளது.
மேற்கொண்டு இவர் ஆரம்பக் கட்ட காலத்திலிருந்து சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் உள்நுழைத்து கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஆலோசனையை எடப்பாடிக்கு கொடுத்து வருகிறார். ஆனால் எடப்பாடி இதற்கு சிறிது கூட இடம் கொடுக்காமல் மறுப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
அப்படி இருக்கையில் இந்த முறை மீண்டும் இணைக்க தவறினால் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இல்லையென்றால் செங்கோட்டையன் தலைமையில் சசிகலாவுடன் இணைந்து கட்சியினை நடத்தவும் வாய்ப்புள்ளதாம். அதுமட்டுமின்றி எம்ஜிஆர் கால கட்டத்திலிருந்து அரசியலை பார்த்தவர் என்பதால் சாதியவாரியவாகும் செல்வாக்கு வழியாகவும் இவருக்கு மதிப்பு அதிகம்.
இதனால் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவருக்கும் இவருக்கு சாதகமாக அமையும். மேற்கொண்டு பன்னீர் செல்வத்தை எடப்பாடி எதிர்த்தது போல் இவரை அவ்வளவு சுலபமாக எதிர்த்திட முடியாது. மேற்கொண்டு இவர் குறித்த சர்ச்சையில் எடப்பாடி சற்று இறங்கி தான் போயாக வேண்டும் என கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி மேற்று நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் கூட தலைவர்களால் வந்ததை நாம் மறக்கக்கூடாது, அதிமுக-வானது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேசியுள்ளார். இவையனைத்தும் மீண்டும் சசிகலா ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கட்சியில் இணைப்பது குறித்த சூசகமான பேச்சு என்பது தெரியவந்துள்ளது.