சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

0
182

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது தங்கையாக நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவலை இன்னும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்த ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் என தொடர்ச்சியாக தனது வயதுக்கு ஏற்ற கேரக்டர்களில் நடித்து வந்தார்.

தற்போது கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்திலும், பொன்மகள் வந்தாள் என்ற படத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார். இந்த நிலையில் கத்துகுட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஜோதிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் கதைப்படி ஹீரோவின் தங்கை கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், அந்த கேரக்டரில் தான் ஜோதிகா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது.

Previous articleதிமுக எம்பி கனிமொழிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! அதிர்ச்சியில் திமுக தலைமை
Next articleவிலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்