க/பெ.ரணசிங்கம் இயக்குனரின் அடுத்த படைப்பு! ஹீரோ இவர்தான்!

Photo of author

By Sakthi

க/பெ.ரணசிங்கம் இயக்குனரின் அடுத்த படைப்பு! ஹீரோ இவர்தான்!

Sakthi

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் புதிய திரைப்படத்தை நடிகர் சசிகுமார் நடக்க இருக்கின்ற திரைப்படத்தை இயக்குனர் விருமாண்டி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் க/பெ. ரணசிங்கம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி சிங் உள்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இணையத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து விருமாண்டி ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பை இயக்குனர் விருமாண்டி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 1975-ஆம் வருடம் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படமானது உருவாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதில் கதாநாயகனாக நடிகர் சசிகுமார் நடிக்க இருக்கின்றார். மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.