சசிகலாவிடம் இருந்து தப்பிச் செல்ல டெல்லியில் போய் ஒளிந்துகொண்டார் முதல்வர்! ஸ்டாலின் கடும் விமர்சனம்!

0
77

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 4 மாதங்களில் இருக்கின்ற நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. ஆளும் கட்சியான அதிமுகவுடன் எதிர்கட்சியான திமுகவுக்கும் தேர்தல் நாள் நெருங்க நெருங்க உரசல் அதிகமாகிக் கொண்டே போகின்றது. எதிர்வரும் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்திருக்கும் நிலையில், இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி போயிருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் அனைத்து திட்டங்கள் தொடர்பாகவும், சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், அவர் பேசி இருப்பதாக தெரிய வருகிறது.

அவருடைய இந்த பயணமானது அரசு முறை பயணம் என்று தெரிவிக்கப்பட்டாலும் இந்தப் பயனத்துடைய முக்கிய நோக்கம் தேர்தல் சம்பந்தமாக தான் இருக்கும் என்று பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தார்கள். அதிலும் சசிகலா விடுதலை ஆக இருக்கும் இந்த நேரத்தில் திடீரென்று முதலமைச்சர் டெல்லி போனதற்கு காரணம் என்ன? பிரச்சாரத்திற்கு முன்பாகவே முதலமைச்சர் டெல்லிக்குப் போய் இருக்கலாமே? என்பது போன்ற கேள்விகளை எல்லாம் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சசிகலாவின் உஷ்ணத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தான் பிரதமரையும், அமித்ஷாவையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார். அதோடு ஆளும் தரப்பின் மீது தொடர்ச்சியாக ஊழல் புகார்களை தெரிவித்து வருகின்றார் ஸ்டாலின்.