எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!!

Photo of author

By Jeevitha

எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!!

தமிழ் திரை உலகில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்,என பல முகங்களை கொண்டவர் தான் சசிகுமார். இவரது முதல் திரைப்படமான சுப்பிரமணியபுரம் திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்து மக்களிடையே இவருக்கு நல்ல அங்கீகாரத்தையும் கொடுத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான வெற்றி படங்களை தந்த சசிகுமார் அவர்கள் இந்த ஆண்டு (முதல் வாரத்தில்) வெளியான அயோத்தி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி சாதனையை படைக்க தொடங்கினார்.

அயோத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சசிகுமார் ஆர்.டி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த திரைப்படத்தின், பெயர் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.