இந்த 3 ஆண்டுகளில் இதை விட்டுவிட்டேன்!! மனம் திறந்த விராட்!!

0
29
#image_title

இந்த 3 ஆண்டுகளில் இதை விட்டுவிட்டேன்!! மனம் திறந்த விராட்!!

மைதானங்களில் விளையாடும் போது ஆக்ரோஷமான கோபத்தையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தியதை பற்றி விராட் கோலி பேசியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் இந்த உலககோப்பை தொடர் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்போது தான் இந்திய மண்ணில் நடக்கவுள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் ஏராளமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை தொடரானது இந்திய மண்ணில் நடைபெறவிருக்கிறது என்பதால் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி தான் வெல்லும் என்று ஏராளமானோரால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் “விராட் கோலி” விளையாட்டு மைதானங்களில் சதம் அடித்தாலும், அல்லது விக்கெட் எடுத்தாலும் எதிரணியை கிண்டல் செய்யும் விதமாக ஆக்ரோஷமான மகிழ்ச்சியினை தெரிவித்து வந்தார்.

இதைப் பற்றி விராட் கோலி கூறியதாவது: நான் எனது ஆக்ரோசத்தையும், கோபத்தையும், விளையாட்டு மைதானங்களில் காட்டியது எல்லாம் என்னுடைய கடந்த காலம் என்று நான் நினைத்துக் கொள்கின்றேன், இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என எனது ரசிகர்கள் பலரும் எனக்கு அட்வைஸ் செய்தனர், மேலும் 2019 ஆம் ஆண்டு நவம்பருக்கு பிறகு நான் ஒரு நல்ல மனிதனாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பிசிசிஐ நிர்வாகம் நடத்திய பேட்டி ஒன்றில்,இதனை விராட் கோலி தெரிவித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

author avatar
Jeevitha