பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய சதீஷ் அவர்கள் தற்பொழுது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் கிஸ்.
இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைக்க இருந்த நிலையில் தற்பொழுது அவர் இந்த படத்தை விட்டு விலகியுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக ஜென் மார்டின் இசையமைப்பாளராக பொறுப்பேற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பு உருவாக்கி வரும் இந்த திரைப்படம் இறுதி கட்ட காட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. திரைப்படத்தின் கதையானது முழு காதல் கதையுடன் காமெடி காட்சிகளையும் கலந்து ரசிகர்கள் ரசித்துப் பார்க்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரிதளவில் இந்த படங்கள் குறித்த தகவல் எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்பொழுது இந்த திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் விலகி உள்ளார் என்றும் அவருக்கு பதிலாக நடிகர் கவின் தன்னுடைய ப்ளடி பெக்கர் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஜென்மார்ட்டின் அவர்களையே சிபாரிசு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.