கட்டப்பா மகள் இயக்கவிருக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா? 

Photo of author

By Parthipan K

 

தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வரும் நடிகர்களின் வரிசையில் சத்யராஜும் இடம்பெறுவார், ரஜினிக்கு அடுத்து வில்லனாக நடித்து ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொண்ட இன்னொரு நடிகர் சத்யராஜ் தான். 

பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மகில்மதி தேசத்தின் சேனாதிபதியாக  நடித்து அசத்தியுள்ளார்.

சத்யராஜின் மகள் திவ்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக “மகிழ்மதி”என்ற படத்தை இயக்கி அறிமுகமாக உள்ளார்.இவர் கொரோனா சூழ்நிலையில் பல்வேறு ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கியும் உதவிகள் பல புரிந்து வருகிறார்.

படத்திற்கு மகில்மதி என்ற பெயரைசூட்டி அதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதிலளித்த திவ்யா, மத்திய பிரதேசத்தில் இருந்த அவந்தி நாட்டின் பண்டைய நகரம் தான் மகிழ்மதி.  பாகுபலிக்கும் நான் இயக்கவிருக்கும் மகிழ்மதி எந்த தொடர்பும் இல்லை.

என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது மகிழ்மதி என்ற பெயர் நினைவுக்கு வந்தது, அதனால்  அப்பெயரை சூட்டி உள்ளேன்