சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

Photo of author

By Parthipan K

சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரை சனி பெயர்ச்சி தன்னலம் இல்லாமல் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே. மேலும் சனியின் நாமம் : பாக்கிய சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைலாப ஸ்தானம்சகோதர ஸ்தானம்ரண ரோக ஸ்தானம்

உங்கள் ராசிக்கு 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார்.

அஷ்டம சனியினால் பிடிபட்டு விடுதலையின்றி தவித்து வந்த காலம் மாறி இப்போது சனிபகவான் அனைத்துவிதமான ஐஸ்வர்யங்களையும் அள்ளிக்கொடுத்து மங்கள சனியாக வருகிறார்.

சனி தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.மேலும் பணிக்காலத்தில் துயில் நீக்க நாம் சிரமப்படுவது போல் வருகின்ற சனிப்பெயர்ச்சிக்கு பின்னர் சற்று சோம்பலும், மந்தத்தன்மையும் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைய சற்று காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த வங்கிக் கடன் சமயத்தில் கைகொடுத்து உதவும்.

மனதில் புதிய நம்பிக்கையும், தெளிவும் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். தங்களது சேமிப்பு உருமாறி வீடு மற்றும் மனை நிலங்களாக வாங்கும் யோகம் உண்டாகும். பொன், பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு :உத்தியோகம் சார்ந்த புதிய முயற்சிகளை அதிகப்படுத்துவதன் மூலம் வெற்றி உண்டாகும். உத்தியோகம் சார்ந்த ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு வாக்குவாதங்களும், புரிதலும் உண்டாகும். மேலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். அதனால் தேவை அறிந்து செலவு செய்யவும். இணையதளம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் உரையாடும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நன்றாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பான சூழல் ஏற்பட்டு மறையும். இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண் விழித்து இருக்காமல் இருப்பது நல்லது. கல்வி தொடர்பான சிறு தூர பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் அவ்வப்போது மந்தமான சூழல் உண்டாகும். விளையாட்டுத்துறையில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.

வழிபாடு முறை :திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசித்து வருவதன் மூலம் சுபிட்சம் உண்டாகும்.