ராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!
உலக மக்கள் அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவர் தான் மாமன்னனாக திகழ்ந்த ராஜராஜ சோழன். இவரின் புகழ் பல நாடுகளிலும் பரவியுள்ளது. இவரின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத சதய நட்சத்திரம் கொண்டாடப்படும்.
ஒவ்வொரு வருடமும் இந்த சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா நவம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
இந்த விழா வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டைப் போல நடப்பு ஆண்டும் ஒரு நாள் மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்வையிட்ட பலரும் அதில் செய்யப்பட்டுள்ள நுணுக்கமான வேலைகளை குறித்து இன்றுவரை எப்படி செய்திருப்பார்கள் என்ற கேள்வியுடனேயே இருப்பார்கள்.
ஏனெனில் அந்த அளவுக்கு அந்த கோவிலில் செய்யப்பட்டிருக்கும் வேலைப்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்படி கோவில் கட்ட முடியும் என்றால் அவர்கள் எவ்வளவு நுண்ணறிவு பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும் அங்கு சென்று வந்தவர்கள் மெய்சிலிர்த்து போய் பாராட்டி வருகின்றனர் என்பதும் நாம் அறிந்ததே.