Sathyan: தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பலரும் காலப்போக்கில் இருக்கும் இடம் தெரியாமல் கூட போய்விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இரண்டு நாட்களாக இணையத்தையே கலக்கி வருபவர்தான் பின்னனி பாடகர் சத்தியம் மகாலிங்கம். இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவானான இளையராஜாவிற்கு கூட பாடல் பாடி கொடுத்துள்ளார். இவரின் பின்னணி பாடகருக்கான திரை பயணமானது 2004 ஆம் ஆண்டு கமலின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் “கலக்கப்போவது யாரு” என்ற பாடலிலிருந்து ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து விஜய், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் என பலரிடம் பின்னணி பாடகராக வேலை பார்த்துள்ளார். ஆனால் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு திரையுலகில் பெரும்பாலான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையை கையாள்வதற்காக ஹோட்டலில் பணிபுரிய நேர்ந்தது. அச்சமயமும் தன்னால் முடிந்த உதவியை இசைக்கலைஞர்களுக்கு அளித்தும் வந்துள்ளார்.
அந்தவகையில் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு இணையத்தில் வைரலாகியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் உன்னிகிருஷ்ணன் பாடிய ரோஜா ரோஜா என்ற பாடலை கச்சேரி ஒன்றில் இவர் பாடியுள்ளார். அந்த பாடல் தற்போது இணையமெங்கும் பகிரப்பட்டு வருவதோடு யார் இந்த பாடகர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி பார்க்கும் போது தான் இவர், பல ஹிட் பாடல்களை கொடுத்தது தெரியவந்துள்ளது.