ரஜினியின் கேள்விக்கு அவரே அதிர்ந்து போகும் அளவு பதில் கூறிய சத்யராஜ்!!

Photo of author

By Gayathri

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சத்யராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் கூலி திரைப்படத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

ரஜினியுடன் மீண்டும் இணைந்தது குறித்து சத்யராஜ் அவர்கள் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது :-

சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் தான் அதிகமாக அரட்டை அடித்ததாகவும் என்ன வொர்க்அவுட் பண்றோம்னு ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக் கொண்டதாகவும் சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து தனக்கு என்ன வயசு என ரஜினிகாந்த் கேட்டதாகவும் 70 வயது என தான்கூற அதைக்கேட்ட ரஜினிகாந்த் ஷாக்கானதாகவும் சத்யராஜ் மேலும் கூறியுள்ளார். ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 171வது படமாக கூலி உருவாகி வருகிறது. படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கானும் முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.