SAVINGS SCHEME: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த முதலீட்டு திட்டம் இது மட்டுமே!!

Photo of author

By Divya

SAVINGS SCHEME: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த முதலீட்டு திட்டம் இது மட்டுமே!!

Divya

Updated on:

SAVINGS SCHEME: This is the only best investment scheme that will double your money!!

SAVINGS SCHEME: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த முதலீட்டு திட்டம் இது மட்டுமே!!

நாட்டு மக்களின் நலனிற்காக அஞ்சல் அலுவலங்களில் பல அட்டகாசமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் ஒரு சிறப்பான திட்டம் தான் கிசான் விகாஸ் பத்ரா(KVP).மக்கள் தங்களின் சேமிப்பை அதிகரிக்க இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.கடந்த 1988 ஆம் ஆண்டு விவசாயிகளின் நலனிற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இன்று யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.

கிசான் விகாஸ் திட்டத்தின் சிறப்பு முதலீட்டு பணம் இரட்டிப்பாகும்.அது மட்டுமின்றி கூடுதல் பாதுகாப்பு மற்றும் அதிக வட்டி கிடைக்கும் திட்டம் என்பதால் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.தற்பொழுது இத்திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

குறைந்தபட்சம் ரூ.1,000 இருந்தால் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.இத்திட்டத்திற்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.115 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் இத்திட்டத்திற்கான முதிர்வு காலமாகும்.வருமான வரி பிரிவு 194A இன் படி இத்திட்டத்திற்கு வரிச் சலுகை இருக்கிறது.

18 வயது நிரம்பிய இந்திய குடிமகன்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.ஆதார்,ஓட்டுநர் உரிமம்,பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றின் ஆவணங்களை பயன்படுத்தி கணக்கு திறக்கலாம்.

பணம்,காசோலை மூலம் முதலீடு செய்த உடன் KVP சான்றிதழ் வழங்கப்படும்.முதலீட்டின் முதிர்வு காலம் முடிந்த பின்னர் நீங்கள் KVP சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 10 வருடங்களுக்கு கழித்து வட்டியுடன் சேர்த்து ரூ.20 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.