இனி கேபிள் டிவிக்கு குட் பாய் சொல்லுங்கள்!! ஜஸ்ட் ரூ.554 செலுத்தினால் 365 நாளும் என்ஜாய் பண்ணலாம்!!

Photo of author

By Gayathri

முன்பெல்லாம் கேபிள் டிவி சேனல்களை பார்க மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.ஆனால் தற்பொழுது OTT சேவை தொடங்கியதில் இருந்து கேபிள் டிவி ஆர்வம் மக்களிடத்தில் குறைந்துவிட்டது.

மேலும் ஏர்டெல்,ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களின் திட்டங்கள் வாடிக்கையார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க லைவ் டிவி சேனல்கள்,OTT ஆப்கள் போன்ற பல சலுகைகளை வாரி வழங்குகிறது.இந்நிலையில் தற்பொழுது எக்ஸிடெல் நிறுவனமானது ஜியோ,ஏர்டெல்லையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் வழங்கும் திட்டங்களின் விலை என்பது முக்கிய அம்சம்.கேபிள் கட்டர் திட்டம் என்ற பெயரில் 300க்கும் அதிகமான சேனல்கள்,200எம்பிபிஎஸ் டேட்டாக்களை வழங்குகிறது.இத்திட்டம் விலை அடிப்படையில் மூன்று டைப்களில் கிடைக்கிறது.அதாவது ரூ.734 திட்டம்,ரூ.719 திட்டம் மற்றும் ரூ.544 திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

எக்ஸிடெல் ரூ.734 திட்டம்

வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை பெற்றால் 400 எம்பிபிஎஸ் டேட்டா சேவைகள் கிடைக்கும்.அது மட்டுமின்றி 36 OTT ஆப்களை வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் 300க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்களை பார்க்க முடியும்.இத்திட்டங்களை பெற வாடிக்கையளர்கள் ஒரு வருடத்திற்கான தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.இத்திட்டம் பெரு நகரங்களில் கிடைத்து வருகிறது.

எக்ஸிடெல் ரூ.719 திட்டம்

இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்கள் 300 எம்பிபிஎஸ் டேட்டா சேவைகளை பெற முடியும்.அது மட்டுமின்றி 37 OTT ஆப்களை வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.ஆனால் டிவி சேனல் சந்தா மட்டும் இதில் பெற முடியாது.

எக்ஸிடெல் ரூ.554 திட்டம்

இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்கள் 200 எம்பிபிஎஸ் டேட்டா சேவைகளை பெற முடியும்.அது மட்டுமின்றி 300க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ள முடியும்.ஆனால் OTT ஆப் சந்தா மட்டும் இதில் பெற முடியாது.