நெல்லிக்காய் ஹேர் டை பயன்படுத்தி வெள்ளை முடிக்கு நோ சொல்லுங்கள்!!
தலையில் உள்ள வெள்ளை முடியை நிரந்தரமாக கருமையாக்க நெல்லிக்காய் ஹேர் டை தயாரித்து பயன்படுத்துங்கள்.
1)பெரிய நெல்லிக்காய்
2)மிளகு
3)தேங்காய் எண்ணெய்
4)தண்ணீர்
செய்முறை:-
முதலில் பெரிய நெல்லிக்காயை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். இந்த நெல்லிக்காய்களில் உள்ள விதையை நீக்கிவிட்டு அதன் சதை பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு காட்டன் துணியில் பரப்பி நன்கு காய விட்டு எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் உலர்த்திய நெல்லி துண்டுகளை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
ஒரு ஈரமில்லாத டப்பாவில் நெல்லிக்காய் பொடியை போட்டு சேமித்துக் கொள்ளவும். அதன் பின்னர் 1/4 கைப்படி அளவு மிளகை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி சேமித்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து 2 தேக்கரண்டி மிளகு தூள் மற்றும் 2 தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி சேர்த்து கருகும் வரை வறுத்து எடுக்கவும். அடுத்து அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் 3/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். இந்த கலவையை பஒரு நாள் முழுவதும் ஆறவைக்கவும்.
மறுநாள் எடுத்து பார்த்தால் ஹேர் டை தயாராகி இருக்கும். இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு தலையை அலசவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் வெள்ளை முடி அனைத்தும் கருமையாகும்.