SBI வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்!
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் டெபாசிட் என்ற ஒன்றையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் எதிர்காலத்தை நினைத்து மக்கள் தங்கள் பெயரிலோ தங்களது வாரிசு பெயரிலும் டெபாசிட் செய்து வருவர். பிற்காலத்தில் பேருதவியாக இருக்கும். அந்த வகையில் தற்போது உள்ள காலத்தினர் பணத்தை சேமித்து வைப்பது பற்றி எந்த ஒரு கவலையும் இன்றி உள்ளனர். பொதுவாக டெபாசிட் என்றாலே பணம் மட்டும் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்பதே அனைவர் பார்வையிலும் காணப்படுகிறது.
ஆனால் எஸ்பிஐ வங்கி எங்க நகையை டெபாசிட் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கி தங்க டெபாசிட் எனப்படும் R-GDS என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் டெபாசிட் செய்ய சில வரைமுறைகள் உள்ளது. கீழ்க்கண்டவற்றில்:
எஸ்பிஐ வங்கியின் தங்க டெபாசிட் குறைந்தபட்சம் பத்து கிராம் கோல்ட் டெபாசிட் செய்ய வேண்டும்.
இத்திட்டத்தினை தனி நபரோ கூட்டு குடும்பமோ அல்லது நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் மூலமாக டெபாசிட் செய்யலாம்.
ஆனால் என்ஆர்ஐ மட்டும் இத்தகைய திட்டத்தில் சேர அனுமதி மறுத்துள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் மூன்று வகைகளில் பயன் பெறலாம் என்று கூறியுள்ளனர்.
அந்தவகையில் குறுகிய கால டெபாசிட் ,நடுத்தர கால அரசு டெபாஸிட் மாற்றும் நீண்டகால அரசு டெபாசிட் என்று வகுத்துள்ளனர்.
முதலில் குறுகிய கால வங்கி டெபாசிட் ஆனது ஒன்று முதல் மூன்று வருட திட்டமாகும். அங்க முதல் வருடத்தில் 0.5% வட்டி கிடைக்கும். அத்திட்டத்தின் இரண்டாவது வருடத்தில் 0.55 சதவீதம் வட்டி கிடைக்கும். அத்திட்டத்தின் மூன்றாவது வருடத்தில் 0.60 சதவீதம் வட்டி கிடைக்கும். இது அனைத்தும் குறுகிய கால வங்கி டெப்பாசிட் ஆகும்.
அதனை அடுத்து இரண்டாவதாக நடுத்தர கால அரசியல் டெபாசிட் 5 முதல் 7 வருட திட்டமாகும்.
இத்திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 2.25 சதவிகிதம் வட்டி கிடைக்கும் என கூறியுள்ளனர்.
அதனை அடுத்து நீண்டகால அரசியல் டெபாசிட் ஆனது 12 முதல் 15 வருட திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 2.50 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இந்த மூன்று டெபாசிட்கள் கீழ் யாரேனும் சேர விரும்பினால் தங்ககட்டி தங்ககாசு மற்றும் பணம் செலுத்தலாம். ஆனால் தங்கள் போன்றவற்றை வங்கி ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளனர். அதேபோல நீங்கள் நகையை டெபாசிட் செய்தால் அதனை மீண்டும் பெறும்பொழுது நகை வடிவில் கிடைக்காது என்று கூறியுள்ளனர். அதற்கு மாற்றாக தங்கக்கட்டி தங்க நாணயம் அல்லது பணமாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.