14 மாவட்டங்களில் SBI வங்கி பதவிக்கான தேர்வு!! மாதம் ரூ.48,500/- சம்பளம்!!

0
8

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க்(SBI) அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக சேவையாற்றி வருகிறது.இந்த வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த வங்கியில் இருந்து 2600 பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: STATE BANK of INDIA

பணி: சர்க்கிள் பேஸ்டு ஆஃபிசர் (CBO)

காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 2600 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பணியிடங்கள்:

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 29-05-2025

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வங்கி விதியின்படி மாதம் ரூ.48,480/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 21 முதல் 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து https://sbi.co.in/documents/77530/52947104/CBO+advt+final.pdf/b4d458c6-020e-d611-1814-479c5bad24ac?t=1746728206892 என்ற ஆன்லைன் இணையதள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 29 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

தேர்வு எழுதவுள்ள மையங்கள்:

சேலம்
சென்னை
நெல்லை
கோவை
கரூர்
கடலூர்
ஈரோடு
நாகர்கோவில்
நாமக்கல்
திருச்சி
வேலூர்
விருதுநகர்
மதுரை
தஞ்சை

தேர்வு கட்டணம்:

SC/ST மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.மற்றவர்களுக்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமாகும்.

Previous articleகரூர் வைஸ்யா வங்கி(KVB) அசத்தல் வேலை!! மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!
Next articleகால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 32 பணிகள்!! ஜூன் 11 விண்ணப்பிக்க இறுதிநாள்!!