நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் அதன் யோனோ ஆப்-ல் பிளாஷிப் பர்ஸ்னல் லோன் ப்ராடக்ட்டான ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தகுதியுடைய வாடிக்கையாளர்கள் தற்சமயம் இதன் மூலமாக 35 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடனை பெற முடியும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது.
இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு வசதியை வழங்குவதையும், டிஜிட்டல் முறையில் அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதையும், நோக்கமாக கொண்டது என்கிறார்கள். அவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரடிட் என்பது சேலரி அக்கவுண்ட் கொண்ட சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கான வங்கியின் தனிப்பட்ட லோன் ப்ராடக்டாகும்.
இது குறித்த அறிவிப்பில் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி அவர்களுக்கு கூடுதலான வசதியை வழங்கும் நோக்கத்துடன் பாரத ஸ்டேட் வங்கியின் தனி செயலில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என்று அந்த வங்கியின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் அந்த வங்கி நிர்வாகம் வெளியிட்ட வலைதள பதிவில் தெரிவித்திருப்பது என்னவென்றால், உங்கள் கனவுகளுக்கு ஆம் என்று சொல்லுங்கள். எங்களுடைய தகுதிவாய்ந்த சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் அறிமுகப்படுத்துகிறோம்.
எங்களுடைய வங்கியின் தனி செயலியில் தற்சமயம் 35 லட்சம் ரூபாய் வரை எளிதான மற்றும் உடனடி கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்சமயம் தங்களுடைய வீடுகளிலிருந்து எங்களுடைய வங்கியின் தனிப்பட்ட செயலியின் மூலமாக எங்களுடைய சேவையை எளிதில் பெறலாம். இது 100% பேப்பர் லெஸ் மற்றும் டிஜிட்டல் முறையிலிருக்கும் இந்த எண்ட் டு எண்ட் 8 வழிமுறையில் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக மற்றும் உடனடியான கடன் கிடைக்கும்.
இந்த புதிய வசதி மூலம் தகுதி, கிரெடிட் காசோலைகள், ஆவணங்கள் மற்றும் மற்ற செயல்முறைகள் உள்ளிட்டவை முற்றிலும் டிஜிட்டல் முறையிலும் ரியல் டைமில் செய்யப்படும் என்றும் அந்த வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரியல் டைம் எக்ஸ்பிரஸ் முறையில் ஸ்டேட் வங்கியின் மத்திய அல்லது மாநில அரசு மற்றும் பாதுகாப்புத் துறையில் சம்பளம் பெறும் வாடிக்கையாளர்கள் இனி தனிநபர் கடனை பெற வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. மேற்கண்ட சேவைகள் தற்சமயம் ரியல் டைமில் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டபடி ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்டின் கீழ் மத்திய அல்லது மாநில அரசு மற்றும் பாதுகாப்புத் துறையில் ஊதியம் பெறும் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் இந்த கடன்களை பெற முடியும் என தெரிவித்திருக்கிறது.
ஸ்டேட் வங்கியில் சேலரி அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானம் 15,000 ஆக இருக்க வேண்டும் என்கிறது அந்த வங்கியின் நிர்வாகம்.
மத்திய, மாநில, அரசு மத்திய பொதுத்துறை நிறுவனம் மற்றும் லாபம் கொடுக்கும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தேசிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் வங்கியுடன் அல்லது தொடர்பில்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் காரா உரையாற்றும்போது தகுதியான சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கடன் வசதியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இது எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவில்லாத மற்றும் காகிதமில்லாத அதன் செயல் முறையை டிஜிட்டலில் அனுபவிக்க உதவி புரியும்.
இந்த கடன் வசதி இங்கே அதிகபட்ச கால கடன் தொகையில் 35 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதோடு நாங்கள் குறைந்த வட்டி விகிதங்களை வசூலிப்போம், இந்த கடனை பெறுவதற்கு பாதுகாப்பு அல்லது உத்தரவாதம் எதுவும் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார்.