மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்!
இந்த கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி மக்களும் இந்த கொரோனா காலத்தில் வங்கிகளுக்கு செல்லாமல் அதிகப்படியாக ஆன்லைன் பரிவர்த்தனையை உபயோகம் செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி பண மோசடி கும்பல் இந்த கொரோனா ஊரடங்கை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.கொரோனா தொற்று காலத்தில் அதிகப்படியான கொரோனா பரவல் காரணமாக அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்த ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே தான் முடங்கி கிடந்தனர்.மோசடி கும்பல் இதனை தன் வசம் படுத்திக்கொள்கிறது.
வீட்டிலுள்ளவர்களிடம் தொலைப்பேசியின் மூலம் அழைப்பு விடுத்து வங்கியிலிருந்து அழைப்பது போல பேசுகின்றனர்.அதனையடுத்து தொலைப்பேசியில் பேசுபவரும் வங்கியிலிருந்து தான் அழைப்பு விடுக்கின்றனர்.என நம்பி அந்த மோசடி கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர்.அந்த மோசடி கும்பல் புதிய பேங்க் புக் அப்ளை செய்ய வேண்டும் என்று கூறி அவர்களின் அக்கவுண்ட் எண்,ஓடிபி போன்றவற்றை வாங்கிக்கொள்கின்றனர்.
வாங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே அவர்கள் அக்கவுண்டில் உள்ள பணம் முழுவதும் வேறோர் அக்கவுண்டிற்கு மாற்றப்பட்டதாக அந்த நபரின் செல்போனுக்கு ஓர் மெசேஜ் வரும்.அதனையடுத்து அவர்கள் தங்களின் பணத்தை மோசடி கும்பலிடம் பறிகொடுத்து விட்டு போலீசாரிடம் புகார் அளிக்கின்றனர்.இதனை அனைத்தும் தடுக்கும் விதமாக SBI மக்களிடம் ஓர் முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டை கூறியுள்ளது.
நாளுக்கு நாள் நாம் நமது செல்போனில் சம்பதம் இல்லாத ஆப் உபயோகம் செய்து வருகிறோம்.அந்த ஆப் கேட்கும் அனைத்திற்கும் தங்களின் விவரங்களை கொடுத்து விடுகின்றனர்.அதனை வைத்தும் மோசடி கும்பல் பலரை ஏமாற்றி வருகிறது.நாம் அன்றாட வாழ்வில் சாப்பாடு முதல் அனைத்து வகையான பொருட்களையும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமே செய்து விடுகிறோம்.பல நெட்வர்க்கிங் ஆப்களை பயன்படுத்தி வருகிறோம்.அதில் நமது அனைத்து முகவரிகளையும் தந்துள்ளோம்.
அதைவைத்து தற்போது வாட்சாப்-களில் பல லிங்குகள் வருகிறது.அதனை கிளிக் செய்ததும் நாம தொலைப்பேசியின் அனைத்து டேட்டா க்களையும் எடுத்துவிடுகிறது,அழைப்புகள் மூலம் சில பேர் ஏமாறுகிறார்கள் என்றால் சிலர் இவ்வாறான லிங்கை க்ளிக் செய்தும் ஏமாற்றம் அடைகின்றனர்.இதனை எல்லாம் தவிர்க்கும் படி SBI பாங்க கூறியுள்ளது.மாதம் ஓர் முறை ஆன்லைன் பரிவர்த்தையின் பாஸ்வர்ட் மாற்றும் படியும் SBI பேங்க் கூறியுள்ளது.