தாவணியை அணிவதால் இப்படி ஒரு பயனா?

Photo of author

By Pavithra

தாவணியை அணிவதால் இப்படி ஒரு பயனா?

Pavithra

அக்காலத்தில் பூப்படைந்த பெண்கள் தாவணி கட்டும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருந்தனர். திருமணத்திற்குப் பின்னர் சேலை கட்டும் வழக்கத்தில் இருந்தனர்.ஆனால் இன்று தாவணி கட்டினாளையே பட்டிக்காடு என்று கலாய்க்கும் அளவுக்கு நம் நாகரிகம் உள்ளது.

ஆனால் இக்காலத்தில்தான் உண்ணும் உணவு இன்றி நம் உடுத்தும் உடையிலேயே பல நோய்கள் வர காரணமாய் இருக்கின்றன.
தாவணி கட்டுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள்??

பருவம் அடைந்த பெண்களுக்கு கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்புளைச் சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும்.அப்போதுதான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் கர்ப்பப்பையை காக்கும் என்பதற்காக பூப்படைந்த பின்னர் பாவாடை தாவணி கட்டும் முறை வழக்கத்தில் இருந்து.இதனால் கர்ப்பப்பை நீர்கட்டிகள் கிருமித் தொற்று போன்றவற்றிலிருந்து பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

ஆனால் நாகரிக வளர்ச்சியால் ஸ்டைலுக்காக போடப்படும் ஜீன்ஸ் ,டி ஷர்ட் போன்ற உடைகள் இருக்கமாக கால்களை ஒட்டிக் கொள்வதால் காற்றோட்டத்தை முற்றிலும் தவிர்த்து விடுகிறது.இதனால் உடலில் உஷ்ணம் அதிகமாகிறது கிருமி தொற்றும் உருவாகிறது. இதனால் உஷ்ணத்தை குறைக்க வேறு வழி இன்றி உடலே கர்ப்பப்பையை காக்க நீர்கட்டியை கர்ப்பப்பைக்குள் ஏற்படுத்திவிடுகிறது.

சகோதிரிகளே புரிந்துகொள்ளுங்கள் சேலையும் தாவணியும் பாதுகாப்பான உடைதான்.அது நாம் உடுத்தும் விதத்தில் உள்ளது.நம் நாகரிக வளர்ச்சி என்று எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் ஆரோக்கியத்தில் 10அடி பின்னோக்கி செல்கிறோம் என்பதனை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது.

காலத்திற்கேற்ற வளர்ச்சி இருக்க வேண்டும் தான் ஆனால் அந்த வளர்ச்சி நம் உடல் நலத்தை எந்த விதத்திலும் பாதிப்படைவதாக இருக்கக் கூடாது.