கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!!

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!!

திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் அவரது மகள் சத்யபிரியா டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார்கள்.மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி.

இவர் முன்னாள் ராணுவ பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்று வருகிறார். பிளஸ் டூ வரை மட்டுமே படித்திருந்த அவரது மனைவி வளர்மதி இரண்டு முறை டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதியுள்ளார். வறுமை மற்றும் திருமணம் வயது காரணமாக தொடர்ந்து தேர்வு எழுதாமல் போனது.

திருமணம் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு தாயான பிறகு இவர் பி.ஏ தமிழ் பட்டப்படிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடித்துள்ளார். இதை தொடர்ந்து அவரது மகள் சத்யபிரியா நீட் தேர்வுக்கு படித்து இரண்டு முறை தேர்வையும் எழுதியுள்ளார்.

வளர்மதி டி.என்.பி.எஸ்.சி தேர்வினை எழுத முடிவு செய்துள்ளார். அந்நேரத்தில் தனது மகளையும் உற்சாகப்படுத்தும் விதமாக தம்முடன் சேர்ந்து தேர்வு எழுத வேண்டும் என தாய் ஆசையால் கேட்டுள்ளார். இதனையடுத்து சத்யபிரியாவும் டி.என்.பி.எஸ்.சி தேர்விற்கு விண்ணப்பித்திருந்தார்.

தற்போது இருவருக்கும் ஒரே தேர்வு மையங்களில் கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி தேர்வு மையத்தில் தாய் மற்றும் அவரது மகளும் ஒரே அறையில் தேர்வு எழுதி முடித்தனர். இதைப் பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

Leave a Comment