நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள்! மத்திய நிதி அமைச்சர்!

0
139

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

சிப் இணைக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் வெளியிடப்படும் நகர்புற திட்டமிடலுக்கு உயர்மட்ட குழு அமைக்கப்படும், அடுத்தகட்டமாக எளிதாக தொழில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் இருக்கின்ற அனைத்து 1.5 லட்சம் தபால் நிலையங்களும் முக்கிய வங்கி அமைப்புடன் இணைக்கப்படும், இது நிதி வைப்பு மற்றும் இணையதள வங்கி மொபைல் வங்கி ஏடிஎம்கள் மூலமாக கணக்குகளை கையாள உதவும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தபால் அலுவலக வங்கி கணக்குகள் மற்றும் வங்கி கணக்குகளுக்கு இடையே பண பரிமாற்றத்தை இணையதளம் மூலமாக பெற இயலும், அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கின்ற விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்சமயம் தபால் நிலையங்கள் இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி மூலமாக சேமிப்பு கணக்கு சேவைகள் மற்றும் பேமெண்ட் வங்கி சேவைகள் வழங்கி வருகின்றன, என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleநாடு முழுவதும் ரசாயனமற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்! மத்திய நிதியமைச்சர்!
Next articleஇந்த தேதியில் அஜித்தின் ‘வலிமை’ வெளியாக வாய்ப்பு!