“திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

Photo of author

By Preethi

“திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தமிழக அரசுடனான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் காலவரையற்ற தொடரும் என அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை அறிவித்தனர்.

இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, முத்துசாமி அன்பில் மகேஷ் தலைமையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

பேச்சுவார்த்தை சுமூக நிலைக்கு எட்டாத நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.