மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம்! இனி அவகாசம் கிடையாது எச்சரிக்கை மக்களே முந்துங்கள்!
தற்போதுள்ள காலகட்டத்தில் ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.வங்கி கணக்கு முதல் அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண் இணைத்து வருகின்றனர்.அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கபட்டுள்ளது.அரசு வழங்கி வரும் 100 யூனிட் மின்சார மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் எழுந்து வந்தது.அதில் வாடகை வீட்டில் இருபவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பை வைத்துள்ளனர்.அவர்கள் எப்படி இதனை செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்கள்.அதனை தொடர்ந்து அரசு தரப்பில் ஆதார் மின் நுகர்வோர் எண் இணைப்பானது எந்த ஒரு காரணத்திற்காகவும் தடைபடக்கூடாது என தெரிவித்தனர்.
இதற்கான காலவகாசம் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியே முடிவடைய இருந்தது.ஆனால் பலரும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்காமல் இருந்தனர். அதனால் அதனை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் முழுவதும் காலவகாசம் வழங்கப்பட்டது.காலவகாசம் முடிவடைய இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது.இதற்கு மேல் இனி காலவகாசம் நீட்டிக்கப்படாது.
ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் பிப்ரவரி மாதம் மின் கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மொத்தம் 2.67 கோடி மின் நுகர்வோரில் தற்போது வரை 2.20 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.