SC , ST மாணவர்ளுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி….

Photo of author

By Parthipan K

SC , ST மாணவர்ளுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி….

Parthipan K

Updated on:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மூலம் மாணவர்கள் தங்களது கல்விக்கு உதவி தொகையை விண்ணப்பிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021-2022ம் கல்வியாண்டுக்கான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவிதொகை வேண்டி விண்ணப்பிக்க, கடந்த சனவரி மாதம் 6ம் தேதி இணையதளம் திறக்கப்பட்டு, கடைசி தேதி பிப்ரவரி 10 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், எஸ்சி, எஸ்டி மாணவர்ளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பிப்.10 வரை விண்ணப்பிக்கலாம் என அந்த மாவட்டத்தின் கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த உதவித்தொகை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், எனவே,உதவித்தொகை பெறுவதற்கான தகுதியுள்ள மாணவர்கள், கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து, சாதி, வருமானம், மதிப்பெண் சான்றுகள், சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் பிப்ரவரி 10ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.