இன்ஜினியரிங் படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் திட்டம்!! படித்து முடிக்கும் வரை அனைத்தும் இலவசம்!!
பாரதி எர்டல் அறக்கட்டளை 25வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் 100 கோடி செலவில் பாரதி ஏர்டல் ஸ்காலர்ஷிப் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.பாரதி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் நோக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்குவதே ஆகும்.
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொறியியல் படிப்புகளை கொண்டிருக்கும் ஐ.ஐ.டிகள் உட்பட டாப் 50 கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை பாரதி எர்டல் அறக்கட்டளை நோக்கமாக கொண்டுள்ளது.ரூ.100 கோடி ஸ்காலர்ஷிப் திட்டத்தில் ஆகஸ்ட் 2024இல் சேர்ககைக்கு தகுதிபெறும் சுமார் 250 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.
பாரதி ஏர்டெல் உதவித்தொகை பெற வேண்டுமென்றால் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இந்த திட்டத்தில் ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் பாரதி ஸ்காலர்கள் என்று இனி அழைக்கப்படுவார்கள்.ஊக்கத்தொகையுடன் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று பாரதி எர்டல் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து உயர்கல்வி மேற்கொள்ள வரும் மாணவ மாணவிகளுக்கான கல்விச் செலவு,தங்கும் விடுதி கட்டணம்,மெஸ் கட்டணம் அனைத்தையும் பாரதி எர்டல் அறக்கட்டளையே ஏற்கும்.
பாரதி ஏர்டல் ஸ்காலர்ஷிப்- விண்ணப்பிப்பம் செய்வது எப்படி?
https://bhartifoundation.org/bharti-airtel-scholarship/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் அட்டை
2)அடையாளச் சான்று
3)+2 மதிப்பெண் சான்று
4)வருமான சான்றிதழ்
5)கல்லூரி மற்றும் விடுதி கட்டண விவரங்கள்
6)மாணவரின் வங்கி கணக்கு எண்
7)கல்லூரியின் வங்கி கணக்கு விவரங்கள்
8)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ