பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையை உயர்த்திய மாநில அரசு! மாணவர்களுக்கு குஷியோ குஷி!

Photo of author

By Sakthi

ஏழை எளிய மாணவர்கள் எந்தவிதமான சிரமமுமின்றி கல்வி பயில்வதற்கு வசதியாக மத்திய, மாநில, அரசுகள் சார்பாக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாக, பல மாணவ, மாணவிகள் பயன்பெற்று அதன் மூலமாக அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள்.

அந்த விதத்தில் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித் தொகையை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு இணையாக மாநில அரசு வழங்கும் என்று அறிவித்திருந்தது. அதனடிப்படையில், பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி வரை படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித் தொகைக்கு ஈடாக தமிழக அரசு உயர்த்தி தற்சமயம் உத்தரவிட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படித்து வருபவர்களுக்கு வழங்கப்பட்ட 2,100 ரூபாயிலிருந்து 4000 ரூபாயாகவும், தினசரி வீடு சென்று வரும் மாணவர்களுக்கு 1,200 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

டிப்ளமோ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும், வருடம்தோறும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும், 2700 ரூபாயிலிருந்து 9, 500 ரூபாயாகவும், நாள்தோறும் வீடு சென்று வரும் மாணவர்களுக்கு 1680 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாகவும், உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட 2, 700 ரூபாயிலிருந்து ஆண்டு தோறும் இனி 13,500 ரூபாயாகவும், நாள்தோறும் வீடு சென்று வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு தொகை 2,100 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இதன் மூலமாக தமிழக அரசு ஆதிதிராவிட மாணவர்களுக்கு வருடம் தோறும் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு இணையாக தமிழக அரசின் உதவித் தொகையை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.