கனமழை காரணமாக நாளை இங்கெல்லாம் பள்ளி கல்லூரிகள் விடுமுறை! திடீர் அறிவிப்பு!
உலகமெங்கும் கொரோனா பரவலின் காரணமாக பல மாதங்கள் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் அதன் பிறகு தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு நோய் தொற்று கட்டுக்குள் வந்ததன் காரணமாக மீண்டும் அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்து உள்ளது.
முதலில் பெரிய வகுப்பு பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் திறக்கப்பட்ட முதல் வாரத்தில் இருந்தே மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதன் காரணமாகவும் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலில் தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் எல்லாம் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்பார்த்த நாளை விட ஒரு நாள் இந்த நிகழ்வு தள்ளி போய் செவ்வாய்கிழமை அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தற்போது சொல்லப்படுகின்றன.
மேலும் இதை தொடர்ந்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமையான இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இதை தொடர்ந்து நாளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.