மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!! தேதி மாற்றியமைக்கப்பட்டது!!

0
91
School education department important announcement for students!! DATE CHANGED!!
School education department important announcement for students!! DATE CHANGED!!

School students: தமிழக அரசு மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வோம் என அறிவித்திருந்தது. அந்த நிலையில் மாநில அளவில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிக்கான அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது.

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகம், காலை உணவு மற்றும் மதிய உணவு என பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மாணவர்களின் கலை திறமையை வெளிப்படுத்த கலைத்திருவிழா போட்டி கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வோம் என அறிவித்திருந்தது. அதற்கான அட்டவணையை இப்போது மாற்றி அமைத்துள்ளது.

1-5வகுப்பு வரை கோயம்புத்தூரில் 06.12.2024 ஆம் தேதி நடைபெறுகிறது. 6-8 வகுப்பு வரை திருப்பூரில் 06.12.2024 ஆம் தேதி நடைபெறுகிறது. 9-10 ஆம் வகுப்பு வரை ஈரோடு மாவட்டத்தில் 05.12.2024-06.12.2024 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் 11-12-ஆம் வகுப்பு முதல் நாமக்கல் மாவட்டத்தில் 05.12.2024-06.12.2024 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் முதல் 25 இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு வெளிநாட்டு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Previous articleமணிப்பூர் வன்முறை காங்கிரஸ் அரசே காரணம்!! ஜெ.பி நட்டா பகீர் குற்றச்சாட்டு!!
Next articleவிடுதலை-2 பட அப்டேட்!! வெற்றிமாறன்  கொடுத்த சர்ப்ரைஸ்!!