கொரோனா காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மாயமானதால் பள்ளி வகுப்புகள் கூட ஆன்லைனில் தான் எடுக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா முதல் அலையில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த ஒரு வருடமாக மூடியுள்ளன. அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வழியாகவே தனது கற்றல் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்று வருகின்றனர். அதேபோல் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டாலும் போதிய பண வசதி இல்லாத ஏழை மக்கள் ஸ்மார்ட்போன் இல்லாததால் இணையதள வகுப்பில் அதாவது ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற முடியாமல் தவித்து வருகின்றனர். ஸ்மார்ட்போன் இல்லாததால் பெற்றோர்கள் வாங்கி தர இயலாததால் எத்தனையோ தற்கொலைகளை நாம் கடந்த வருடத்தில் பார்த்துவிட்டோம்.
இதனால் பள்ளிக் கல்வித் துறை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில் ஸ்மார்ட்போன் இல்லாததால் இணையதள வகுப்பில் பங்கேற்க முடியாத மாணவர்களின் விவரங்களை சேகரித்து விரைவில் சமர்பிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால் விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று மாணவர்கள் நம்பிக்கையாக உள்ளனர். இந்த உத்தரவு மாணவர்களுக்கு நல்ல செய்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.