பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு! அரையாண்டு விடுமுறையில் மாற்றம்!
தொடக்க பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்தின் படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு கடந்த டிசம்பர்-16 அன்று தொடங்கி டிசம்பர் 23 இன்றுடன் முடிய உள்ளது.
அதையடுத்து நாளை டிசம்பர்-24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையாக அறிவித்தது பள்ளிக்கல்வித் துறை. மீண்டும் பள்ளிகள் ஜனவரி -2 ஆம் தேதி திறக்கப்பட்டு வழக்கம் போல செயல் படும். மேலும் விடுமுறையில் மாணவர்களுக்கு எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இந்நிலையில் திடீரென அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுப் பற்றி பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனால் அவர்களுக்கு அளிக்கும் விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக 3 நாட்களுக்கு பின்னர் அதாவது ஜனவரி- 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். மேலும் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்த படி ஜனவரி-2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர் கூறினார்.