பத்தாம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழி விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் !!

0
126

பத்தாம் வகுப்பு பாடத்தில் இந்தி மொழியை திணிப்பதாக வந்த செய்தி குறிப்பிற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு தற்பொழுது ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திறன் அறிவோம் என்ற குறுவினா ஒன்றில், இந்தி கற்க விரும்பும் காரணத்தை குறிப்பிடுக என்ற கேள்வி கேட்கபட்டிருப்பதாகவும், அது தொடர்பாக சில புகைப்படங்களும் வெளியானது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை , மாணவர்களிடையே இந்தி மொழியை திணிப்பதாக சமூகவலைத்தளத்தில் கண்டனக்குரல் எழுந்தது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பாடப்பகுதியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி தவிர மூன்றாவது மொழியாக , கற்க விரும்பும் மொழி எது? என்று கேட்டுள்ளதாகவும், அதற்கான காரணம் எழுது என்று தான் கேள்வி கேட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இந்தி திணிப்பு தொடர்பாக தகவல் வெளியானது உண்மை இல்லை என்றும், இந்திமொழி பற்றி எந்தக் குறிப்பும் அதில் இடம்பெறவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது

 

Previous articleகுர்ஜார் சமூகத்தை சேர்ந்த மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் – ரயில்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி விடப்பட்டது!
Next articleசட்டசபை தேர்தலுக்கு மும்முறமாக தயாராகும்! மக்கள் நீதி மையம்!