போய் சாவுங்கடா எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்! கண்டனம் தெரிவிக்கும் எதிர் கட்சிகள்!

0
156
school-education-minister-who-said-dont-go-and-die-opposition-parties-condemn
school-education-minister-who-said-dont-go-and-die-opposition-parties-condemn

போய் சாவுங்கடா எனக் கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்! கண்டனம் தெரிவிக்கும் எதிர் கட்சிகள்!

இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பல உயிர்களை இழந்து கவலைக்கிடத்தில் உள்ளனர்.குறிப்பாக இந்த இரண்டாம் அலை மிக தீவீரமாக பரவியது.அதிலும் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலில் மத்திய அரசு முதலில் எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்தது.அதனையடுத்து மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்ட நிலையில் நலத்திட்டங்களை செய்ய முன் வந்தது.

அந்தவகையில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தி மக்களை காத்து வந்தது.அதுமட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலை வாய்ப்பு இன்றி இருப்பார்கள் என்பதால் மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி உதவியது.அதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.

மாணவர் மற்றும் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டது.கொரோனா தொற்று சற்றும் குறையா காரணத்தினால் தேர்வுகள் இன்றி மாணவர்களுக்கு ஆள் பாஸ் செய்தும் வந்தனர்.கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே தேர்வுகள் நடத்தி வந்தனர்.தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் மக்கள் அனைவரும் வேலை வாய்புகள் இன்றி இருக்கின்றனர்.இந்த காலக்கட்டத்தில் பள்ளிகளில் பள்ளி கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால் சில பள்ளிகளில் பெற்றோர்களிடம் கட்டணம் கட்டும்படி வலுக்கட்டயமாக கூறி வருகின்றனர்.அதிலும் மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் அதிகப்படியாக பள்ளி கட்டணம் வசூலித்து வருகின்றனர்.தற்போது மத்திய பிரதேசம் முழுவதும் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.பாஜக ஆட்சி வரும் காலங்களில் அராஜகமாக மாறி வருகிறது என பலர் கூறுகின்றனர்.அதற்கேற்றார் போல் தான் தற்போது பாஜக-வின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் நடந்துள்ளார்.

பெற்றோற்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பரமர் இல்லத்திற்கு சென்றனர். பெற்றோர்கள் அமைச்சரிடம்  பள்ளிகள் இவ்வாறு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு தீர்வே இல்லையா எனக் கேட்டுள்ளனர்.அதற்கு கல்வித்துறை அமைச்சர் நின்று கூட பதிலளிக்காமல் காரை நோக்கி சென்றுக்கொண்டே  போய் சாவுங்கடா அதாவது மாரோ ஜாவோ என பெற்றோர்களை பார்த்து  கூறியுள்ளார்.இவர் கூறியதை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் இவ்வாறு கூறியதற்கு மக்கள் மற்றும் எதிர் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleதமிழக அரசின் திடீர் உத்தரவு! இன்று முதல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல்!
Next articleவிவசாயிகளுக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வாகனங்கள் உடைப்பு