24 ஆம் தேதி இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் ஆட்சியர் உத்தரவு!
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மற்றும் மாண்டஸ் புயல் போன்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் தான் பள்ளிகளுக்கு மீண்டும் வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகையின் பொழுது தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை வழங்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை வருவதினால் நடப்பு கல்வியாண்டுக்கான பாடதிட்டத்தினை முழுமையாக முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் பிப்ரவரி 24 ஆம் தேதி தேரோட்டம நடைபெற உள்ளது. அதனால் அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று மாணவ மாணவிகளுக்கு பள்ளி இறுதி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தால் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும். அதனை தொடர்ந்து இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் நான்காம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.