இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! ஒமைக்ரானின் தொற்று அதிகரிப்பு!

0
154
School holidays for students in this class! Increase in omega-3 infection!
School holidays for students in this class! Increase in omega-3 infection!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! ஒமைக்ரானின் தொற்று அதிகரிப்பு!

கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்டா வகை கொரோனா ஒமைக்ரானாக  உரு மாறிக் கொண்டு வருகிறது. இச்சமயத்தில் மகாராஷ்டிரா  மாநிலத்தில் அதிக அளவு ஒமைக்ரா தொற்று பரவி வருகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்றளவும் துவங்காமல் உள்ளது. இந்நிலையில் 1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடக்கும் என்று கூறினர். தற்பொழுது டெல்டா வகை காரோனோ ஒமைக்ரா தொற்றாக மாறி மகாராஷ்டிராவில் 18க்கும் மேற்பட்டோருக்கு உறுதியாகி உள்ளது.

இக்காரணத்தினால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்தும் தற்காலிகமாக நேரடி வகுப்புகள் நடத்தும் தேதியை  ஒத்திவைத்துள்ளனர்.அதற்கு பதிலாக நேரடி வகுப்புகள் டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவ்வாறு துவங்க இருக்கும் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.மேலும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு முன்பே ஆர்டிபிசிஆர் சோதனை செய்து இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் சோதனை செய்த சான்றிதழை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்த பின்னரே பணிக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் ஏதேனும் மாணவர்களிடம் காணப்பட்டால் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளனர். பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு முன் பெற்றோரின் ஒப்புதலைக் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல பள்ளி மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடிப்பது முகக்  கவசம் அணிதல் போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல மாணவர்கள் வகுப்பறையில் ஒரு மேசை நாற்காலியில் ஒரு மாணவர் மட்டுமே உட்கார வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேபோல ஒரு மேசை நாற்காலி க்கும் மற்றொரு மேசை நாற்காலிக்கும்  6 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Previous article57 வயதில் 7 வது குழந்தைக்கு தந்தையான பிரதமர்! அதுவும் மூன்றாவது மனைவியா?
Next articleமாரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய இந்தியர்!