சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனை பெற்ற பிறகு இதுதான் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி இருக்கின்றது.
இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்ற அந்த சங்கத்தின் மாநில தலைவர் பிகே இளமாறன்.
தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மருத்துவ குழுவின் ஆலோசனையின் படியும், சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படியும் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்ய வேண்டும்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால், தன் குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்துடன் இருந்துவரும் பெற்றோர்கள், இன்னொருபுறம் பொதுத்தேர்வு நெருங்கிவரும் பயம் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளில், வெற்றியடைய முடியுமா என்ற குழப்ப நிலையிலேயே பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
அதேசமயத்தில் பள்ளிகளை திறந்தால், மாணவர்கள் விதிமுறைகளை விழிப்புணர்வோடு கடைபிடிப்பவர்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
தொடர்ந்து 5 மணி நேரம் முக கவசம் அறிந்து கொண்டே இருப்பார்களா? தினமும் ஒரு முக கவசம் அணிவார்களா? அல்லது தரமான முக கவசம் அணிவார்களா? அதிலும் சுத்தம் செய்த அணிவார்களா? என்பது சந்தேகம்தான்.
இப்படிப்பட்ட நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாகவும், மாணவர்கள் பாதுகாப்பு சம்பந்தமாகவும், சுகாதாரத் துறையின் ஆலோசனை பெற்று மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவின், நம்பிக்கையான அறிக்கையினை பெற்று அதன் பெயரில் அரசு எடுக்கின்ற நடவடிக்கையே பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடும்.
அதிலும் சென்ற ஆறு மாத காலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக படிப்பு முடங்கிப் போயுள்ள நிலையில், பொதுத்தேர்வை எதிர்பார்த்து இருக்கும் மாணவர்கள் நேரடியாக பயிற்சி பெற்றால், மட்டுமே மீண்டும் நம்பிக்கையுடன் படிப்பார்கள்.
அதோடு பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக, இந்த ஆண்டில் குறைக்கப்படும் 40 சதவீத பாடத்திட்டங்கள் எவை என்று தெரிவித்தால் மாணவர்களுக்கு கூடுதல் நம்பிக்கை உண்டாகும்.
ஆகவே பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இடம் கருத்து கேட்பது வரவேற்கத்தக்கது, ஆனாலும் இந்த நிலை புயல், வெள்ளம், இயற்கை சீற்றம் என்றால், பகுதிக்கு ஏற்றார்போல மாறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது .
அவர்களைப் பாதுகாக்கும் வழிமுறையை அவர்களே அறிந்து கொள்வார். ஆனாலும் கூரான தொற்று எந்த நேரத்திலும் ஏற்படும் என்ற அச்சத்தை நீக்க சுகாதாரத்துறை மற்றும், மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையுடன், அரசு அளிக்கும் நம்பிக்கை மட்டுமே பெற்றோர்களுக்கு நிம்மதி அளிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.