ஜனவரியில் உறுதியாக பள்ளிகள் திறக்கப்படும்!! மத்திய அரசு உத்தரவு!

0
146

பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு வருகின்ற ஜனவரி மாதத்தில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையானது கிட்டத்தட்ட 9 மாதங்களாக நீடித்து வருகின்ற நிலையில், தற்போது பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றது.

இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்த நிலையில் அதற்கு பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. ஆனாலும் தற்போது வரை தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு ஜனவரி 4ம் தேதி பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ.) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சி.ஐ.எஸ்.சி.இ. அமைப்பின் இயக்குநர் ஆராதோன், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
மாணவர்கள் உரிய விளக்கங்களை பெறுவதற்கும், புராஜெக்ட், பிராக்டிகல் செய்வதற்கும் பள்ளிகளை திறந்தால்தான் முடியும். எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளிகளை திறக்க வேண்டும். அதேநேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றால் தான் அவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும். எனவே, இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்திலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் கட்டாயமாக திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவாகன ஓட்டிகள் அதிர்ச்சி! அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!
Next article6.62 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!