கண்ணசைத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலை காலில் விழுந்த மாணவி – எல்லாமே ஸ்கிரிப்டா இணையவாசிகள் விமர்சனம்
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மாநிலத்தில் கட்சியை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக தினம் ஏதாவது ஒரு கட்சி கூட்டம், செய்தியாளர் பேட்டி மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக என செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்குள் தமிழகத்தில் பாஜகவை வளர்த்து விட வேண்டும் என்ற முனைப்புடன் அவர் செயல்பட்டு வருகிறார். இதற்காக தற்போது அவர் கையில் எடுத்துள்ள திமுக எதிர்ப்பு என்ற பிரச்சாரம் அவருக்கு நன்றாக கை கொடுக்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்த அளவுக்கு திமுக எதிர்ப்பை கையில் எடுக்காத சூழலில் அண்ணாமலை அதை கையிலெடுத்து பேசி வருவது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரத்தில் பாஜகவில் உள்ள சில மூத்த தலைவர்கள் மத்தியில் அண்ணாமலை மீது அதிருப்தியும் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இவர் மீது அவ்வப்போது சில குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நீட் தேர்வில் 104 மதிப்பெண் எடுத்த மாணவி ஒருவர் தான் மருத்துவர் ஆக முடியுமா என்று அண்ணாமலையை சந்தித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அந்த மாணவியின் முழு படிப்பு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறியிருந்தார்.

மேலும் நீட் தேர்வு சுலபமானது என்றும்,மாணவர்கள் விடா முயற்சியுடன் படித்தால் அதில் வெற்றி பெறலாம் என்றும் அவர் ஆலோசனை கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து இந்த உதவி கிடைத்ததற்கு அந்த மாணவியும் மகிழ்ச்சியடைவதாக பேட்டி அளித்திருந்தார். இது மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது.
அந்த வகையில் பல தரப்பினரும் அண்ணாமலையின் செயலை பாராட்டி வந்த நிலையில் தற்போது அதை கெடுக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#ShameOnYouAnnamalai 😡 pic.twitter.com/iKsEaNdn2Z
— Omar Moktar (@lionofdesert_) September 11, 2022
அதில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணாமலையை பார்க்க வந்த அந்த மாணவியிடம் தமிழக பாஜக கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி சிக்னல் கொடுக்கும் வகையில் கண்ணசைக்க பின்னர் அந்த மாணவி அண்ணாமலை காலில் விடுவது போல அங்கு வீடியோ அமைந்துள்ளது.
அதனை கவனித்த அண்ணாமலை இது மாதிரி செய்ய வேண்டாம் என அந்த மாணவிக்கு அட்வைஸ் செய்கிறார். இதனை பார்த்த இணையவாசிகள் இது எல்லாமே ஸ்கிரிப்ட்டா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.