பள்ளி மாணவர்களுக்கு ஆய்வு பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. மேலும் தற்போது வந்த தகவல் படி பள்ளி மாணவர்களின் கண் பார்வை, மூக்கு மற்றும் இடுப்பளவு ஆகியவற்றின் ஆய்வு நடத்தி பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
அதனையடுத்து ஒவ்வொரு மாணவர்களையும் தனித்தனியாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனர்களின் கண், காது, மூக்கு ஆகிய உறுப்புகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த ஆய்வு நடத்த வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாணவர்களும் அருகில் மற்றும் தொலைவில் பொருட்களை பார்க்கும் திறன் எப்படி உள்ளது என்று கண்டறிய வேண்டும். மேலும் கண்கள் சிவந்துள்ளதா மற்றும் புத்தக்கத்தை வாசிப்பதில் சிரமம் இருக்கிறதா மற்றும் கண்களில் குறைபாடு உள்ளதா ஆகியவை ஆராய வேண்டும். அதனையடுத்து மாணவர்களின் இடுப்பு நீளம் அளவீட வேண்டும். அதனை தொடர்ந்து உயரம் மற்றும் எடை போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பற்களில் எதாவது குறைபாடு உள்ளதா, பாதங்கள் அளவு, தலுப்பு அவர்களுக்கு எங்கே உள்ளது போன்ற விவரங்களும் பதிவு செய்ய வேண்டும். மேலும் இது போன்ற 42 வகை குறைபாடுகள் குறித்து ஆய்வுகள் நடத்தி பதிவிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.