பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த சில மாதங்களாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.மாணவர்கள் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடப்பாண்டில் காலாண்டு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அவர் கூறியதாவது, கொரோனாத் தொற்று கட்டுக்குள் வந்த பிறகு கட்டாயம் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.மேலும் பள்ளிகள், மாணவர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும்,அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment