கோவை மாவட்டம் பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட வழக்கில் 302 பிரிவின்கீழ் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). இவன் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறான்.
இவன் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தாரன் . இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை மிரட்டி உள்ளான்.
இதனை அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த ராம்குமாரை கைது செய்து அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் கைதான ராம்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.