தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம்

0
208
#image_title

தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம்

கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவ மாணவிகள் 25 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் மேலூர், எரவார், லட்சுமி நகர் ,கீழ் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் பயின்று கொண்டிருக்கும்போது திடீரென பள்ளியின் ஒரு அறையில் இருந்து விஷத்தேனீகள் பள்ளி மாணவ மாணவிகள் மீது கொட்டியதால் மாணவ மாணவிகள் அலறியடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதில் அந்த விஷத்தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்த 25-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மேலூர் வட்டார அரசுமருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயக்கமான நிலையில் உள்ள மாணவ மாணவிகளை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேனீக்கள் கொட்டி 25 பள்ளி மாணவ மாணவிகள் மயக்கமடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Previous articleயக்ஷாகானா நிகழ்ச்சியில் மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞர் உயிரிழப்பு
Next articleபுதிய நாடாளுமன்ற வளாகத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி! பணியாளர்களுடன் கலந்துரையாடல்