பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! தவறான தகவல்! அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

Photo of author

By Kowsalya

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! தவறான தகவல்! அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

Kowsalya

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை! தவறான தகவல்! அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து தவறான தகவல்கள் பரவி உள்ளதால் இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.இந்நிலையில் மத்திய கல்வித்துறையானது பள்ளிகள் எப்போது திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று மாநில கல்வித் துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், திறந்தால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இருக்காது எனவும், 10 ,11 மற்றும் 12 ஆகிய பொதுத் தேர்வு அடுத்த ஜூன் மாதம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது. இதை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பூசாரியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10ஆம் தேதி வெளியிடுவார் என கூறியிருந்தார்.பள்ளிகள் திறக்கப்படாது. பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் பொய்யானது. மக்களின் நலன் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பின் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.