கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு!!

Photo of author

By Vinoth

கனமழை காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி திருவாரூர் தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.  டெல்டா மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை  பரவலாக மழை பெய்து வருகிறது.  ஆனால் ஒரு சில இடங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது.  நேற்று முதல் தென் மாவட்டங்களான திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி இந்த மூன்று மாவட்டங்களில் விடிய விடிய மேல்வழி மண்டல அடுக்கு சுழற்ச்சி  நிலவுகிறது.

இதனால் தமிழகத்தில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானில் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டார்.  மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலும், காரைக்கால், ராமநாதபுரம், திருவாரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மேலும் தமிழகத்தில் கடலூர் மாவட்டங்களில் வரும் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரை கனமழை தொடரும். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.