செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளிகள் திறப்பு! அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Hasini

செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளிகள் திறப்பு! அதிரடி அறிவிப்பு!

Hasini

Schools open from September 1st! Notice of Action!

செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளிகள் திறப்பு! அதிரடி அறிவிப்பு!

கொரோனா தொற்று ஆரம்பித்த முதலில் இருந்தே பள்ளிகள் அனைத்தும் மூடப் பட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து உள்ளனர். அதே போல் குழந்தைகளின் மீது செய்யப்படும் வான் கொடுமைகளும் அதிகரித்து உள்ளன.

தற்போது நோய் தொற்று குறைந்துள்ளதாலும், குழந்தைகளை அது பெரிதளவில் பாதிக்காது என அறிவியலாளர்கள் தெரிவிப்பதாலும் அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளை திறக்க ஆயத்தமாகி வருவது குறிப்பிடத் தக்கது. எனவே அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது டெல்லியில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும்  டெல்லி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி கல்வித்துறை மந்திரி மணிஷ் சிசோடியா கூறும்போது இவ்வாறு கூறினார்.

செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளிலும் வகுப்புக்கான வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கான வகுப்புகள் மற்றும் அவர்களின் பயிற்சி வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுகிறது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் எந்த ஒரு மாணவரும் கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்த வில்லை என்றும் கூறியுள்ளார் மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்