பள்ளிகளை முன்கூட்டியே திறக்கக் கூடாது! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு!!

0
287
#image_title

பள்ளிகளை முன்கூட்டியே திறக்கக் கூடாது! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு!

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு கூறிய தேதிக்கு முன்னதாக திறக்கப்படும் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் அறிவித்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்தார். இந்த உத்தரவை மீறி சென்னியில் உள்ள ராமாபுரத்தில் தனியார் பள்ளி ஒன்று இன்று திறக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் “கோடை வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பள்ளிகளை முன்கூட்டியே திறக்கக் கூடாது.

இந்த உத்தரவையும் மீறி தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டால் அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு உத்தரவை மீறி திறக்கப்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

சி.பி.எஸ்.இ பள்ளிகள் பத்தாம் வகுப்புகளுக்கு மேல் திறந்திருக்கலாம். ஆனால் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறக்கக் கூடாது. மீறி திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகள் முன்கூட்டியே திறந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து மாவட்டங்கள் தோறும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.

 

Previous articleசமையல் எரிவாயுவின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மூழ்கிய பயனாளர்கள்!!
Next articleமேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசை எச்சரிக்கிறேன்! அதிமுக கட்சிக் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை!