கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவாமல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடபடாமல் இருப்பதால் மக்கள் பலரும் கடும் சோகத்தில் இருந்து வந்தார்கள்.
இந்த நிலையில், தற்போது நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால் பண்டிகைகள் அனைத்தும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
அந்த விதத்தில் இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்சமயம் பள்ளிகளுக்கு நாளை மறுதினமும் அதாவது சனிக்கிழமை விடுமுறை அளித்து கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5ஆம் தேதி அதாவது நாளைய தினம் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது என்ற சூழ்நிலையில், பல ஆசிரியர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஆறாம் தேதியும் அதாவது நாளைய தினமும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை