தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழை!

0
77

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 20 மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட, மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது இந்த மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது பாபநாசம் அணையில் இருந்து ஒரு வினாடிக்கு ஆயிரத்து 805 கன அடி தண்ணீர் தாமிரபரணி நதியில் திறந்து விடப்பட்டிருக்கிறது.

அதேபோல குறுக்குத்துறை, சுப்பிரமணிய சுவாமி கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் கன மழை பெய்து வருவதன் காரணமாக, குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு உண்டாக்கி இருக்கிறது. இதனால் மெயின் அருவிக்கரையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பாதை சேதமடைந்து இருக்கிறது. பெண்கள் உடைமாற்றும் அறையில் ஒரு சுவரும் சேதம் அடைந்து இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரையில் இடைவிடாது மழை பெய்து வருவதன் காரணமாக, தென்பெண்ணை ஆறு கெடிலம் செங்கால் ஓடை பரவனாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.இதற்கிடையில் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கல்குளம் பகுதியில் இருக்கக்கூடிய செங்கால் ஓடையின் குறுக்கே அமைந்திருக்கின்ற கல்குளம், திருவெண்ணைநல்லூர் இணைப்பு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய அடைமழை பெய்து வந்தது இதனால் நேற்றும் நீடித்த இந்த கனமழையின் காரணமாக, காலையில் இருந்து மாலை வரையில் விட்டுவிட்டு சாரல் மழை தூறிக் கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது இதனால் புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோவிலில் தண்ணீர் புகுந்தது பல்வேறு பகுதிகளில் குடிசைகள் சேதம் அடைந்திருக்கின்றன. ஆடுமாடுகள் உயிரிழந்து விட்டனர்.

அதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் போயிருந்தனர். பல பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சம்பா தாளடி நெல் பயிர்கள் மூழ்கிப் போயினர் இதேபோல திருவாரூர், மயிலாடுதுறையிலும், மழை கொட்டித் தீர்த்து இருக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே விடிய, விடிய பெய்த மழையின் காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் சிக்கி 2 காவலாளிகளை தீயணைப்பு படையினர் மீட்டனர் மேலும் பள்ளிக் கட்டிடத்தின் மீது மரம் சாய்ந்து விழுந்து விட்டது.